மகாத்மா காந்தியின் பேரன் கனுபாய் காந்தி காலமானார்.

மகாத்மா காந்தியின் பேரன் கனுபாய் காந்தி. இவர்தான் உப்பு சத்தியாகிரகத்தின்போது காந்தியின் தடியை பிடித்துக்கொண்டு முன்னால் சென்ற சிறுவன். இது வரலாற்றில் பதிவான புகைப்படங்களில் இடம்பெற்றுள்ளது.

ganthy

கனுபாய் காந்தி, அமெரிக்கா சென்று படித்தார். பின்னர் அங்கேயே அமெரிக்க விண்வெளி ஆய்வு மையமான நாசாவில் விஞ்ஞானியாக பணியாற்றியுள்ளார். இவரது மனைவின் பெயர் சிவலட்சுமி.

kanthy-kanubai-ganthy

அமெரிக்க வாழ்க்கையிலிருந்து விடுபட்டு; காந்தி, தன்னுடைய மனைவி சிவலட்சுமியுடன் கடந்த 2014ம் ஆண்டு இந்தியா திரும்பினார். பணமில்லாததினால் யாரிடம் உதவி கேட்க விரும்பாமல் ஊர் ஊராக சுற்றித்திரிந்துள்ளனர். பின்னர் சிலரது உதவியுடன் இருவரும் முதியோர் இல்லத்தில் சேர்ந்தனர். பக்கவாதத்தால் பாதிக்கப்பட்ட கனுபாய் காந்தி சூரத்தில் உள்ள மருத்துவமனை ஒன்றில் சேர்க்கப்பட்டிருந்தார். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று இரவு அவர் இறந்தார். அவரது மனைவி சிவலட்சுமியும் நோயால் பாதிக்கப்பட்டுள்ளார்.

Related Posts