மகாகவி சுப்பிரமணிய பாரதியாரின் நினைவு தினத்தை முன்னிட்டு வட்டுக்கோட்டையில் பாரதி வீதி திறப்பு!

மகாகவி சுப்பிரமணிய பாரதியாரின் 103வது நினைவு தினத்தை முன்னிட்டு யாழ்ப்பாணம் வட்டுக்கோட்டையில் பாரதி வீதி திறந்து வைக்கப்பட்டுள்ளது.

அதன்படி நேற்றைய தினம் வட்டு தென்மேற்கு பகுதியில் உள்ள குறித்த வீதிக்கு பாரதி வீதி என பெயர் சூட்டப்பட்டு குறித்த வீதியானது திறந்து வைக்கப்பட்டுள்ளது

இந் நிகழ்வில், மறவன்புலவு சச்சிதானந்தம் பிரதம அதிதியாக கலந்து கொண்டதுடன், மதகுருமார், வலிமேற்கு பிரதேச செயலாளர், வலிமேற்கு பிரதேச சபை செயலாளர் , கிராம சேவையாளர், பேராசிரியர் பொன் பாலசுந்தரம்பிள்ளை, இந்திய துணை தூதரக அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்

Related

Related Posts