மகள்களுடன் விவாதம்செய்யும் கமல்ஹாசன்

கமல்ஹாசனைப் போலவே அவருடைய இரு மகள்கள் ஸ்ருதி, அக்ஷரா திரைத்துறையில் சாதித்துக் கொண்டிருக்கிறார்கள்.

kamal

ஸ்ருதிஹாசன் தமிழில் மட்டுமல்லாது தெலுங்கு, ஹிந்தி ஆகிய மொழிகளிலும் தனக்கென தனி மார்க்கெட்டை வைத்துள்ளார். அக்ஷரா அறிமுகமான முதல் படத்திலேயே அமிதாப் பச்சன், தனுஷ் ஆகியோருடன் நடித்தார். இப்போது ஸ்ருதி, அக்ஷரா இருவரும் முதல் முறையாக தங்களுடைய அப்பா கமல்ஹாசனுடன் இணைந்து ‘சபாஷ் நாயுடு’ படத்தில் பணி புரிய இருக்கிறார்கள்.

கமல்ஹாசன் நாயகனாக நடிக்க, ஸ்ருதிஹாசன் நாயகியாக நடிக்க, அக்ஷராஹாசன் உதவி இயக்குனராகப் பணிபுரிய ‘சபாஷ் நாயுடு’ படத்தில் இவர்கள் இணைவது ‘சபாஷ் ஹாசன்’ என சொல்ல வைக்கப் போகிறது.

தற்போது இந்தப் படத்தின் ஹிந்திப் பதிப்புக்கான கதை விவாதமும், கதை படிப்பும் கமல்ஹாசன் அலுவலகத்தில் நடந்து வருகிறது. அதில் கமல், ஸ்ருதி, அக்ஷரா ஆகியோருடன் படத்தில் கமலுக்கு இணையாக முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கும் சௌரப்பும் கலந்து கொண்டுள்ளார்.

விரைவில் இப்படத்தின் படப்பிடிப்பு அமெரிக்காவில் ஆரம்பமாக உள்ளது.

Related Posts