மகளை ஹீரோயினாக்க தனுஷுடன் கவுதமி பேச்சுவார்த்தை?

நடிகை கவுதமி தனது மகளை நடிகையாக்க தனுஷ், சிவகார்த்திகேயன் உள்ளிட்ட ஹீரோக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறாராம்.

subbulakshmi-gauthami

நடிகை கவுதமி சந்தீப் பாட்டியா என்பவரை திருமணம் செய்து ஓராண்டில் பிரிந்துவிட்டார். சந்தீப், கவுதமிக்கு சுப்புலட்சுமி என்ற மகள் உள்ளார். சுப்புலட்சுமிக்கு தாய் வழியில் நடிகையாக ஆசையாக உள்ளதாம்.

மகளின் ஆசையை நிறைவேற்றி வைக்க முடிவு செய்துள்ளாராம் கவுதமி.

சுப்புலட்சுமியை ஹீரோயினாக்க முன்னணி இயக்குனர்கள், தயாரிப்பாளர்களுடன் கவுதமி பேச்சுவார்த்தை நடத்தி வருகிறாராம். மேலும் தனுஷ், சிவகார்த்திகேயன் உள்ளிட்ட ஹீரோக்களுடனும் பேசி வருகிறாராம்.

சுப்புலட்சுமிக்கு முன்பே படங்களில் நடிக்க வாய்ப்புகள் வந்தன. ஆனால் சரியான நேரத்தில் தனது மகளை திரையுலகில் அறிமுகம் செய்து வைக்க கத்திருந்தார் கவுதமி.

சுப்பு நடிகையாக விரும்புவதால் முறைப்படி நடிப்பு மற்றும் நடனப் பயிற்சி எடுத்துள்ளாராம். தாய் வழியில் பெரிய ஹீரோயினாகி தனக்கென ஒரு பெயர் எடுக்க விரும்புகிறாராம்.

நான் முதலில் ஒரு தாய். என் மகளுக்கு நல்ல தாயாக இருக்க விரும்புகிறேன். அதற்கு நான் மன அமைதியுடன் இருக்க வேண்டும் என கவுதமி உலக நாயகன் கமல் ஹாஸனை பிரிந்தபோது தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Posts