மகளை வைத்து படம் இயக்குகிறார் அர்ஜூன்

ஜெய்ஹிந்த்-2 படத்தின் இறுதிக்கட்ட வேலைகளில் பிஸியாக இருக்கும் நடிகர் அர்ஜூன், விரைவில் தனது அடுத்த படத்திற்கான வேலைகளையும் துவக்க உள்ளாராம். அந்த படத்தில் தனது மகள் ஐஸ்வர்யாவையே ஹீரோயினாக்கவும் உள்ளாராம், அர்ஜூன்.

arjun-daughte

அர்ஜூன் சமீபத்தில் அளித்த பேட்டியில் கூறுகையில், ஜெய்ஹிந்த் -2 படத்தின் போஸ்ட் புரோடெக்ஷன் பணிகள் தற்போது நடைபெற்று வருகிறது. அக்டோபர் மாதம் ஜெய்ஹிந்த்-2 படத்தை ரிலீஸ் செய்ய முடிவு செய்துள்ளோம். இந்த படத்தை முடித்த பிறகு எனது மகள் ஐஸ்வர்யாவை வைத்து புதிய படம் ஒன்றை எடுக்க போகிறேன்.

தற்போது என்னிடம் இரண்டு கதைகள் கைவசம் உள்ளது. விரைவில் அந்த கதைகளில் ஒன்றை தேர்வு செய்ய உள்ளேன். இது முழுக்க முழுக்க காதல் கதையாக இருக்கும். படத்தின் 80 சதவீதம் காட்சிகளை வெளிநாடுகளில் படமாக்கவும் திட்டம் உள்ளது என்றார்.

மேலும் அவர் கூறுகையில், எனது மகளை வைத்து படம் இயக்குவது கண்டிப்பாக எனக்கு வித்தியாசமான அனுபவமாக இருக்கும். அவள் முதலில் பயந்தாலும், நாங்கள் அவளுடன் இருப்பதால் தற்போது தைரியமாக படத்தில் நடிக்க ஓகே சொல்லி விட்டாள் என்று சொல்லும் அர்ஜூன் தான் அந்த படத்தில் நடிக்கவில்லை எனவும் தெரிவித்துள்ளார்.

அந்த படத்தின் இயக்கமும், தயாரிப்பும் மட்டும் தான் நான் என்பவர், மற்ற மொழிகளிலும் இந்த படத்தை எடுப்பது குறித்து இன்னும் முடிவு செய்யவில்லை என்கிறார்.

Related Posts