மகளுக்காக இந்திய மாணவரின் வலைத்தள முகவரியை விலை கொடுத்து வாங்கிய பேஸ்புக் நிறுவனர்!

இந்திய மாணவரின் வலைத்தள பதிவு உரிமையை விலை கொடுத்து வாங்கியுள்ளார் பேஸ்புக் நிறுவனர் மார்க் ஸக்கர்பர்க்.

கேரளாவை சேர்ந்த பொறியியல் மாணவர், அமல் அகஸ்டின், இவர் வலைத்தள முகவரிகளை தனது பெயரில் பதிவு செய்து கொள்ளும் பொழுதுபோக்கு உடையவர். maxchanzuckerberg.org என்ற வலைத்தள முகவரியை தனது பெயரில் பதிவு செய்து வைத்திருந்தார் அகஸ்டின்.

இந்நிலையில், வலைத்தள பெயர் பதிவு செய்யும் நிறுவனமான Godaddy-யில் இருந்து அமலிற்கு அவரின் வலைதள முகவரியை விற்பனை செய்ய விருப்பமா எனக் கேட்டு மின்னஞ்சல் வந்துள்ளது, அதை ஏற்றுக்கொண்டு 47,000 விலைக்கு விற்க சம்மதம் தெரிவித்து பதில் அனுப்பியுள்ளார் அமல்.

பெயர் பதிவு மாற்றத்திற்காக ஒப்பந்தம் அமலுக்கு மின்னஞ்சலில் வந்த போது அதில் இருந்த கடிதம் பேஸ்புக் நிறுவனத்தின் அலுவலகத்தில் இருந்து வந்திருப்பது தெரியவந்தது, அப்போது தான் அமலின் வலைத்தள முகவரியை பேஸ்புக் நிறுவனர் மார்க் வாங்கியிருக்கிறார் என்பது அமலிற்கு புரிந்தது.

இது குறித்து அமல் கூறியது, “பேஸ்புக் நிறுவனர் மார்க்கிற்கு கடந்த ஆண்டு இறுதியில் பெண் குழந்தை பிறந்தது, அக்குழந்தையின் பெயர் Maxime Chan Zuckerberg, இதை தெரிந்து கொண்டு அதன் குறுகிய பெயரான maxchanzuckerberg.org என்ற பெயரில் வலைத்தள முகவரியை பதிவு செய்து வைத்திருந்ததாகவும், அதையே இப்போது 47,000 ரூபாய்க்கு மார்க் வாங்கியுள்ளார் என்றும் தெரிவித்தார்.

Related Posts