மகளிர் தினத்தில் அம்மாவுடன் வாலு படம் பார்த்த சிம்பு

நேற்று முன்தினம் மகளிர் தினத்தை முன்னிட்டு தனது வாலு படத்தை தனது அம்மாவுக்கும், நண்பர்களுக்கும் ஸ்பெஷலாக திரையிட்டு காட்டினார் சிம்பு.

Vaalu-Movie-Simbu-Hansika-Still-3

எஸ்.எஸ்.சக்ரவர்த்தியின் நிக் ஆர்ட்ஸ் தயாரிப்பில் விஜய் சந்தர் வாலு படத்தை இயக்கியுள்ளார். சிம்பு, ஹன்சிகா நடித்துள்ள இப்படம் இந்த மாத இறுதியில் – 27 ஆம் தேதி – வெளியாகிறது. இரண்டு வருடங்களுக்குப் பிறகு திரைக்கு வரும் சிம்பு படம் இது.

மகளிர் தினமான நேற்று முன்தினம் சிம்பு சென்னையிலுள்ள ப்ரிவியூ திரையரங்கில் வாலு படத்தை தனது அம்மாவுக்கும், நண்பர்களுக்கும் திரையிட்டார்.

வாலுவை தொடர்ந்து சிம்பு, நயன்தாரா நடித்துள்ள இது நம்ம ஆளு திரைக்கு வருகிறது. கௌதமின் அச்சம் என்பது மடமையடா படத்தில் அவர் தற்போது நடித்து வருகிறார்.

Related Posts