வெலிக்கடை சிறைச்சாலையில், சிறைவைக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ, சிறைச்சாலையில் என்ன என்ன செய்கிறார் என்று, அவரை பார்த்துவிட்டு வந்த நாடாளுமன்ற உறுப்பினர் டலஸ் அலகபெரும தெரிவித்தார்.
அங்குள்ள சிறை கைதிகளுக்கு அவர், யோகாசனம் கற்றுக்கொடுக்கின்றார் என்றும் டலஸ் எம்.பி தெரிவித்தார். அதேபோல, அவர் சிறைச்சாலையில் மிகவும் சந்தோஷமாக இருக்கின்றார் என்றும் கூறினார்.
இதேவேளை, நாமல் ராஜபக்ஷவை தாய் ஷிரந்தி ராஜபக்ஷ, சகோதாரர்கள் மற்றும் எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் பார்வையிட்டுள்ளனர்.
நாமலை பார்த்த தாய், கண்ணீர்விட்டு அழுதுவிட்டார் என்று, அவருடன் சென்று திரும்பியவர்கள் தெரிவித்தனர்.