மகனின் ஸ்டண்ட் காட்சியை பார்த்து அசந்துபோன அருண் விஜய்

தமிழ் சினிமாவில் ஹீரோவாக களமிறங்கிய அருண் விஜய், அஜித் நடிப்பில் வெளிவந்த ‘என்னை அறிந்தால்’ படத்தின் மூலம் வில்லனாக பேசப்பட்டார். இதைத் தொடர்ந்து இவருக்கு வில்லன் வேடங்களில் நடிக்கவே வாய்ப்புகள் வருகிறது.

அதன்படி, தற்போது கன்னட படம் ஒன்றில் வில்லனாக நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு பெங்களூரில் நடைபெற்றபோது, இந்த படப்பிடிப்பை வேடிக்கை பார்க்க அவரது மகன் அர்னவும் படப்பிடிப்பு தளத்துக்கு வந்திருந்தான்.

அப்போது, அருண் விஜய் 10-வது மாடியில் இருந்து கயிற்றின் உதவியோடு கீழே குதித்து சண்டை போடும் காட்சி படமாக்கப்பட்டது. இதை பொறுமையாக பார்த்துக் கொண்டிருந்த அர்னவ், தானும் அதுபோல் ஸ்டண்ட் காட்சியில் நடிக்கவிரும்புவதாக கூறியுள்ளான்.

அவனது ஆசையை பூர்த்தி செய்யும்விதமாக, 10-வது மாடியில் இருந்து கயிறு மூலம் அவனை இறக்கி, ஸ்டண்ட் செய்யும் காட்சியை படமாக்கியுள்ளார்கள். இந்த சிறுவயதிலும் மகனின் தைரியத்தை பார்த்து அருண் விஜய் அசந்து போனாராம்.

இந்த ஸ்டண்ட் காட்சி படத்தில் இடம்பெறாது என்றும், தனது மகனின் ஆசைக்காகவே இதை படமாக்கினோம் என்றோம் அருண் விஜய் கூறினார்.

arunvijay

Related Posts