அரசாங்க நாட்காட்டியில் பௌர்ணமி தினங்கள் வர்த்தக விடுமுறையாக அறிவிக்கப்படவில்லை என உள்ளக நிறுவன ஊழியர் சங்கங்களின் தலைவரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான வசந்த சமரசிங்க தெரிவித்தார்.இதேவேளை பொதுபல சேனா அமைப்பு இதே குற்றாச்சாட்டை முன்வைத்துள்ளது. பௌத்த மக்கள் செறிந்து வாழும் இலங்கையில், பௌத்தர்களுக்கு முக்கியமான பௌர்ணமி தினங்கள் இதுவரை காலமும் வர்த்தக விடுமுறைகளாக அறிவிக்கப்பட்டிருந்தது.
எனினும், 2013ம் ஆண்டு அரச நாட்காட்டிகளில் பௌர்ணமி தினங்கள் பொதுவிடுமுறையாக அறிவிக்கப்பட்ட போதிலும், வர்த்தக விடுமுறைகளாக அறிவிக்கப்படவில்லை என பொதுபல சேனா அமைப்பு ஊடக அறிக்கை மூலம் குற்றம் சுமத்தியுள்ளது.
எனினும், ஏனைய மதங்களுக்கு முக்கியமான தினங்கள் பொது விடுமுறையாக அறிவிக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளது.தைப்பொங்கல், ரமழான் பண்டிகை, நபிகள் பிறந்த தினம், ஹஜ் பெருநாள், நத்தார் பண்டிகை போன்றவை வர்த்தக விடுமுறைகளாக அறிவிக்கப்பட்டுள்ளன என சுட்டிக்காட்டியுள்ளார்.