பௌத்த விகாரை அமைப்பதற்கெதிரான கலந்துரையாடல் திட்டமிட்டபடி இடம்பெறும்

கிளிநொச்சி மாவட்டம் இரணைமடுவிலுள்ள கனகாம்பிகை அம்மன் ஆலயத்திற்கு அருகில் பௌத்த ஆலயம் அமைக்கப்படுதல் உட்பட வடக்கில் தொடர்ச்சியாக ஏற்படுத்தப்பட்டுவரும் சிங்கள பௌத்த மயமாக்கல் தொடர்பாகவும், இடம்பெயர்ந்தோர், காணாமல் போனோர், அரசியல் கைதிகள் தொடர்பாகவும் கலந்து பேசவும், ஏதுவான நடவடிக்கைகளை எடுக்கவுமென ஏற்பாடு செய்யப்பட்டுள்ள கூட்டம் திட்டமிட்டவாறு இடம்பெறும்.

திகதி: 13-08-2016 (சனிக்கிழமை)
நேரம்: பி.ப 4.00 மணி
இடம்: கூட்டுறவு கலாசார மண்டபம், ஏ9வீதி, கிளிநொச்சி (டிப்போசந்தி அருகாமை)

நன்றி
ஏற்பாட்டாளர்கள்

Related Posts