பௌத்த மயமாக்கலுக்கு எதிராக தெற்கில் போராடினால் இணைந்து கொள்வோம் – யாழ். மாணவர்கள்

சிங்கள பௌத்த மயமாக்கலுக்கு எதிரான போராட்டத்தை தெற்கில் செய்துகாட்டினால் இணைந்து போராடத் தயார் என யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்கள், வசந்த முதலிகேவிடம் தெரிவித்துள்ளனர்.

வெடுக்குநாறி ஆதிலிங்கேஸ்வரர் ஆலய சம்பவத்தை கண்டித்து நேற்று திங்கட்கிழமை இடம்பெற்ற போராட்டத்தின் பின்னரே அவர்கள் இந்த நிபந்தனையை முன்வைத்துள்ளனர்.

அண்மையில் தம்மால் கோரிக்கைகள் எதுவும் முன்வைக்கப்படவில்லை என வசந்த முதலிகே ஊடகங்களுக்கு தெரிவித்திருந்தார்.

இருப்பினும் தங்களது தரப்பில் இருந்து பத்து கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டதாக யாழ். பல்கலை கலைப்பீட மாணவர் ஒன்றிய உபதலைவர் இரா.தர்ஷன் தெரிவித்துள்ளார்

Related Posts