பௌத்த மதத்தின் வளர்ச்சிக்கு அடிப்படைக் காரணமே இந்து மதம் : அமைச்சர் விஜித் விஜயமுனி

புதிய அரசியல் யாப்பில் பௌத்த மதத்திற்கு முதலிடம் கொடுத்து பௌத்த மதத்தை காப்போம் அதுபோன்று ஏனைய மதங்களுக்கும் பாதுகாப்பும் மதங்களை போதிப்பதற்கான உத்தரவாதமும் வழங்கப்படும் என்று நீர்ப்பாசன மற்றும் நீர்வள முகாமைத்துவ அமைச்சர் காமினி விஜித் விஜயமுனி செய்சா தெரிவித்தார்.

மத்திய நீர்ப்பாசனத் திணைக்களத்தின் 650 மில்லியன் ரூபா ஒதுக்கீட்டில் மட்டக்களப்பு செங்கலடி பிரதேச செயலாளர் பிரிவில் அமைக்கப்படவுள்ள கிரான்புல்சேனை அணைக்கட்டிற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு நேற்று நடைபெற்றது. இந்நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அமைச்சர் இவ்வாறு குறிப்பிட்டார்.

தொடர்ந்து அமைச்சர் உரையாற்றுகையில் ,

நாட்டில் வாழும் மக்கள் அனைவருக்குமாக எங்களுடைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன புதிய அரசியல் யாப்புச் சட்டத்தை உருவாக்கவுள்ளார்.

அரசியல் யாப்புச் சட்டம் கொண்டுவருவதில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, எதிர்க்கட்சித் தலைவர் சம்பந்தன் ஆகியோருக்கு பங்களிப்பு உள்ளது. இவர்க்ள மூவரும் இருக்கும்போது நாட்டுக்குப் பொருத்தமான அரசியல் யாப்பு உருவாக்கப்பட வேண்டும்.

கௌதம புத்தர் இந்தியாவிலிருந்து பௌத்த மதத்ததை கொண்டுவந்தார் கதிர்காமக் கந்தன் இந்தியாவிலிருந்து வந்தார். கணபதி, முருகன், உட்பட அனைத்து தெய்வங்களையும் சிங்களவர்களும் தமிழர்களும் வணங்குகின்றோம்.

பௌத்த மதத்தின் வளர்ச்சிக்கு அடிப்படைக் காரணமே இந்து மதமாகும். 1918ஆம் ஆண்டு வெல்லஸ பகுதியில் வெள்ளையருடன் யுத்தம் நடைபெற்றபோது அவர்களுக்கு பயந்து சிங்கள மக்கள் கிழக்கு மாகாணத்தில் தஞ்சம் புகுந்தனர். பாதுகாப்புக்காக எங்களுடைய சிங்கள மக்கள் தமிழ் முஸ்லிம் பெயர்களை இணைத்துக்கொண்டனர்.

நாட்டில் சகல மக்களும் கலந்து வாழ வேண்டும். அனைவரும் அனைத்து பண்டிகைகளையும் கொண்டாட வேண்டும். நாட்டில் உள்ள மக்களின் பல்தரப்பட்ட கலாசாரங்களினால் தமத தனித்துவம் பேணப்படுகிறது. இங்குள்ள தமிழர்கள் போன்று மலையகத்தில் உள்ள தமிழர்கள் இந்தியாவிலிருந்து வந்தாலும் நாட்டின் பொருளாதரத்தில் பாரிய பங்களிப்பபை செய்கிறார்கள்.

முஸ்லிம்கள் இந்த நாட்டிற்கு வரும்போது மனைவிகளை அழைத்து வரவில்லை. அவர்கள் அங்கிருந்த சிங்கள மற்றும் தமிழ் சகோதரிகளை மணந்துகொண்டனர்.

கிரான்புல்சேனை திட்டத்திற்கு யாரும் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை அனைத்து விவசாயிகளும் இதனால் பயனடைய வேண்டும். இந்த மக்கள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு வாக்களித்தவர்கள். மக்களுக்கு சேவை செய்வதன் ஊடாக நல்லிணக்கத்தைக் கொண்டுவரவேண்டும் என ஜனாதிபதி விரும்புகிறார் என்று அமைச்சர் குறிப்பிட்டார்.

நான் சிறுவனாக இருக்கும் போது முன்னாள் பிரதமர் சிறிமாவோ பண்டரநாயக்கவுடன் மட்டக்களப்பிற்கு வரும்போது 122 தோரணங்கள் அமைத்து அவர்களை வரவேற்றனர்.

1989ஆம் ஆண்டு நாடாளுமன்ற உறுப்பினராக இருக்கும் போது ஜேவிபிக்கு ஒழிந்து இருக்கும் போது தற்போது மாகாணசபை உறுப்பினராக இருக்கின்ற கோவிந்தன் கருணாகரம், மாவை சேனாதிராஜா. ஜோசப் பராராஜசிங்கம் போன்றோர் பாராளுமன்ற உறுப்பினராக எங்களுடன் இருந்தார்கள்.

பயங்கரவாத யுத்திலிருந்து தப்பி நாங்கள் உயிருடன் இருக்கின்றோம் என்னுடன் இருந்த பலர் உயிருடன் இல்லை 30வருட வருட யத்தில் என்ன நடந்தது. ஏன் நாங்கள் சண்டையிட்டோம். தற்போது நாடு ஒரு சமாதான சூழ்நிலையில் உள்ளது. தற்போது நாட்டின் சகல பகுதிகளிலும் சுதந்திரமாக செல்லக்கூடிய சூழ்நிலை தற்போது உருவாகியுள்ளது என்று அமைச்சர் சுட்டிகாட்டினார்.

Related Posts