போலீஸிடம் இருந்து நடிகர் அருண்விஜய் தப்பி தலைமறைவு

துபோதையில் காரை ஓட்டி விபத்துக்குள்ளாக்கியதால் நடிகர் அருண்விஜய்யை போலீசார் கைது செய்திருந்தனர். ஆனால் போலீஸ் காவலில் இருந்த அருண்விஜய் தப்பி ஓடி தலைமறைவானார். இதனால் அவரது காரை முதல் கட்டமாக போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.

arun-vijay

சென்னையில் நடிகை ராதிகா மகளின் திருமண வரவேற்பு நடைபெற்றது. இதில் திரை உலக பிரபலங்கள் பெரும் எண்ணிக்கையில் பங்கேற்றனர்.

இந்நிகழ்ச்சியில் மதுபான வகைகள் ஏகத்துக்கும் பரிமாறப்பட நடிகர், நடிகைகள் தள்ளாடியபடிதான் ஹோட்டலை விட்டு வெளியேறினர். ஆனாலும் போலீசார் பெரிதாக கண்டுகொள்ளவில்லை.

இப்படி உச்சபோதையில் காரை ஓட்டி வந்த நடிகர் அருண்விஜய், போலீசாரின் வாகனம் மீது மோதி விபத்தை ஏற்படுத்தியது சிக்கலாகிவிட்டது. இதனால் நடிகர் அருண்விஜய் மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிந்து கைது செய்தனர்.

சென்னை நுங்கம்பாக்கம் காவல்நிலையத்தில் போலீஸ் காவலில் இருந்த அருண்விஜய் திடீரென அங்கிருந்து தப்பி ஓடிவிட்டதாக போலீசார் தெரிவித்துள்ளனர். இதனால் நடிகர் அருண்விஜய்யின் காரை போலீசார் தற்போது முதல் கட்டமாக பறிமுதல் செய்துள்ளனர். அருண்விஜய்யையும் போலீசார் தேடி வருகின்றனர்.

Related Posts