Ad Widget

போலி மருத்துவர்கள் அறுவருக்கும் தண்டம்

சாவகச்சேரி பகுதியில் கண்டுபிடிக்கப்பட்ட போலி மருத்துவர்கள், ஆங்கில மருந்து கொடுத்த ஆயுர்வேத மருத்துவர்கள் உள்ளிட்ட 6 பேருக்கு சாவகச்சேரி நீதிமன்றம் 50 ஆயிரம் ரூபா தண்டம் விதித்து நேற்று செவ்வாய்க்கிழமை (05) தீர்ப்பளித்தது.

fack-doctors-chavakachcherei

சாவகச்சேரி பிரதேசங்களில் போலி மருத்துவர்கள் செயற்படுகின்றார்கள் என கிடைத்த தகவலினையடுத்து சாவகச்சேரி. பருத்தித்துறை.கோப்பாய் மற்றும் சண்டிலிப்பாய் பிரதேச சுகாதார வைத்தியர்கள் இணைந்து கடந்த திங்கட்கிழமை சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டனர்.

இந்தச் சோதனை நடவடிக்கையில். போலி மருத்துவர்கள் நால்வரும்.ஆங்கில மருந்துகளை வழங்கிய ஆயுர்வேத மருத்துவர்கள் இருவருமாக மொத்தம் அறுவர் கைது செய்யப்பட்டனர்.

கைது செய்யப்பட்டவர்களை சாவகச்சேரி நீதிமன்றத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை ஆஜர்ப்படுத்திய போது நீதிவான், போலி மருத்துவர்கள் நால்வருக்கு தலா 5 ஆயிரம் ரூபா அபராதமும்,ஆங்கில மருந்து கொடுத்த ஆயுர்வேத மருத்துவர் இருவருக்கு தலா 15 ஆயிரம் அபராதம் விதித்ததுடன், இனிமேல் இவ்வாறான நடவடிக்கையில் ஈடுபடக்கூடாதென கடுமையாக எச்சரித்து அவர்களை விடுதலை செய்தார்.

Related Posts