போலி தொலைபேசி அழைப்புகள் தொடர்பில் கவனமாயிருக்கவும்

அதிஷ்ட இலாபச் சீட்டிழுப்பில் வெற்றிப்பெற்றதாக கூறி வெளிநாடுகளில் இருந்து வரும் அழைப்புக்கள், குறுஞ்செய்திகளுக்கு பதில் அளித்தல் மற்றும் தொடர்பை ஏற்படுத்தல் என்பவற்றை தவிர்க்குமாறு தொலை தொடர்புகள் ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழு பொதுமக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளது.

பொதுமக்களிடம் பணம் பறிக்கும் நோக்கில் மேற்கொள்ளப்படும் இவ்வாறான போலி வெளிநாட்டு அழைப்புகள் தொடர்பில் நாட்டின் பல பாகங்களில் கிடைக்கப்பெற்ற முறைப்பாடுகளை அடுத்து, அந்த ஆணைக்குழு இவ்வேண்டுகோளை விடுத்துள்ளது.

அது தொடர்பில் நாடு முழுவதுமுள்ள பொலிஸ் நிலையங்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளதுடன், பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்கான சுவரொட்டிகளை ஒட்டும் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளது என்றும் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
அவ்வாறான சம்பவங்கள் தொடர்பில், 1900 என்ற அவசர தொலைபேசி இலக்கத்துக்கு முறைப்பாடு செய்யலாம் என்றும் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

Related Posts