போலி ஐயாயிரம் ரூபா நாணயத்தாள்கள் புளக்கத்தில் இருப்பதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.
இதனால் கொடுக்கல் வாங்கல் நடவடிக்கையின் போது மிக அவதானத்துடன் இருக்குமாறு பொலிசார் பொதுமக்களை கேட்டுள்ளனர்.
களுத்துறை வடக்குப் பகுதியில் உள்ள வீடொன்றில் சிலரினால் அச்சிடப்பட்ட போலி ஐயாயிரம் ரூபா கள்ள நாணயத்தாள்கள் தரகர்கள் மூலம் புளக்கத்தில் விடப்பட்டுள்ளன. இது குறித்து மிக விழிப்புடன் செயற்படுமாறு, பொலிசார் பொதுமக்களைக் கேட்டுள்ளனர்.