தமிழர்களாகிய நாங்கள் மகிந்தவையும், மைத்திரியையும் நிராகரிப்போம்.தேர்தலைப் பகிஸ்கரிப்போம்.வாக்களிப்பை தவிர்ப்போம்.அல்லது எமது வாக்குகளைச் செல்லுபடியற்றதாக ஆக்கிவிடுவோம். என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஜனநாயகப் பிரிவு என்று உரிமை கோரப்பட்ட துண்டுப்பிரசுரங்கள் யாழ்.குடாநாட்டில் பலபாகங்களில் விநியோகிக்கப்பட்டு வருகின்றன.
இது குறித்து தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமாகிய மாவை
சேனாதிராஜாவிடம் தொடர்பு கொண்டு கேட்ட போது,
இவ்வாறான துண்டுப்பிரசுரங்கள் போலியானவை, மக்களை வாக்களிக்கவிடாது திசை திருப்பும் முயற்சியே.ஆகவே இந்த துண்டுபிரசுரங்களுக்கும் தமிழ்த் தேசியக்கூட்டமைப்புக்கும் எதுவித தொடர்பும் இல்லை.நாளை (இன்று) நடைபெறவுள்ள தேர்தலில் மக்களை வாக்களிக்க விடாது குழப்பும் நோக்கத்திலேயே இவ்வாறான செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுகின்றது.
ஆகவே மக்கள் இவ்வாறான போலியான துண்டுப்பிரசுரங்களை நம்பி ஏமாறாமல் எந்தவித பயமுமின்றி துணிச்சலுடன் வாக்களிப்பு நிலையங்களுக்குச் சென்று வாக்குரிமைகளை பயன்படுத்துங்கள் என அவர் மேலும் தெரிவித்தார்.