போர் நிறுத்தம், பணயக் கைதிகள் விடுதலை!

இஸ்ரேல் – ஹமாஸ் இடையே 4 நாள் போர் நிறுத்தம் மற்றும் பணயக் கைதிகள் விடுதலையை உள்ளடக்கியதாக இருக்கும் சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

மேலும், காசா மீது தரைவழி மற்றும் வான்வெளி தாக்குதல் நடத்தப்பட மாட்டாது என்றும், அதற்கு பதிலாக இஸ்ரேல் மற்றும் பிற நாடுகளைச் சேர்ந்த 50 – 100 பணயக் கைதிகள் விடுதலை செய்யப்படலாம் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

இருப்பினும், ஹமாஸ் வசம் உள்ள இராணுவ வீரர்கள் விடுவிக்கப்பட மாட்டார்கள் எனவும் இது ஒப்புக்கொள்ளப்படும் பட்சத்தில், இஸ்ரேல் நாட்டு சிறைகளில் இருந்து 300 பாலஸ்தீன பெண்கள் மற்றும் குழந்தைகள் விடுவிக்கப்படுவர்களும் எனவும் எதிர்பார்க்கப்படுகின்றது.

காசாவில் போர் நிறுத்தத்திற்கு ஈடாக ஹமாஸால் கைப்பற்றப்பட்ட பணயக்கைதிகளை விடுவிப்பதற்கான ஒப்பந்தத்திற்கு இஸ்ரேல் அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

Related Posts