போர் தந்த உளப்பாதிப்புக்கள் ஆறி வருகின்றன – முதலமைச்சர்

வடகிழக்கு மாகாண மக்கள் சுமார் 30 வருட காலத்தின் போது இப்பேர்ப்பட்ட சித்த அழகைத் தொலைத்துவிடக் கூடிய துர்பாக்கிய சூழலுக்குள் தள்ளப்பட்டார்கள்.ஆனால் இப்போது மேலெழுந்த வாரியாக இயல்பு நிலைக்குத் திரும்புவதாக தெரிந்தாலும் எமது உண்மையான ஆரம்ப அழகிய சித்த நிலைக்கு நாம் யாவருந் திரும்பி விட்டோமா என்று கேட்டால் இல்லை என்றே பதில் கூற வேண்டிய அவசியம் எம்மைச் சார்ந்துள்ளதாக வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரன் தெரிவித்தார்.

நேற்று காலை 10 மணியளவில் மருத்துவ பீட கூவர் மண்டபத்தில் வடமாகாண சுகாதார சுதேச வைத்தியத்துறை அமைச்சு வழங்கும் சித்தம் அழகியார் உலக உளநல தினத்தையொட்டி சிறப்பு நிகழ்வுகள் இடம்பெற்றது.இதில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றுகையிலே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

மேலும் அவர் உரையாற்றுகையில்,

உலக உளநல தினம் கொண்டாடப்படுவதன் முக்கிய நோக்கம் உலக உளநலம் பற்றிய விடயங்களை மக்கள் தெரிந்து கொள்வதற்காகவே. உளநலப் பாதுகாப்பு என்று கூறும் போது நாம் மற்றவர்களின் மனதில் ஏற்படுத்தும் வடுக்களை நாம் உணர வேண்டும்.

மேலும் மக்கள் மனநலம் குன்றி வாழ வேண்டிய நிர்ப்பந்தத்தினுள் அமுக்கப்படுகின்றார்கள்.பல சிறைச்சாலைகளில் வாடி வதங்கி வாழும் எமது சமூக மக்கள் இப்பேர்ப்பட்ட பாதிப்புக்கு ஆளாகியுள்ளனர்.ஆனாலும் அந்தப் பாதிப்புக்களையே ஒரு கவச ஆயுதமாக்கி மனப்பாதிப்பை வெளியே நிறுத்தக் கூடியவர்களும் உள்ளார்கள்.

யுத்த காலத்தின் போது சுனாமி எம் பிரதேசத்தைப் பாதித்தது.அப்போது சுனாமியின் பின்னரான சில காலத்திற்குப் போரில் உக்கிரமாகப் போரிட்ட இருதரப்பாரும் மனித அடிப்படையில் ஒருவருக்கு ஒருவர் ஒத்தாசையாய் ஒழுகிப் பாதிக்கப்பட்ட பலபேருக்கு அன்பையும்,அனுசரணையும் வழங்கினார்கள்.ஓரிரு வாரத்தின் பின்னர் வேதாளம் திரும்பவும் முருங்கை மரம் ஏறிவிட்டது ஒருவரையொருவர் கொல்ல எத்தணித்தார்கள் எதிரெதிராக நின்றிருந்தோர்.

ஆனால் இன்று நாம் போரின் உக்கிரத்தில் இருந்து விடுபட்டுள்ளோம் மக்களின் நலம் காண வேண்டிய ஒரு கடப்பாடு எம் எல்லோரையும் பீடித்துள்ளது.எனவே

எனவே எம்மை நாமே சுய விமர்சனத்திற்கு உட்படுத்த ஆயத்தமாக வேண்டும்.என்பதுடன் நாம்.அனைவரும் சித்தம் அழகியாரே எம் சித்தத்தில் பாதிப்புக்கள் ஏற்பட்டதால் சில நேரங்களில் நாம் பேதலித்த நடத்தைகளில்மாட்டிக்கொண்டு விடுகின்றோம்.அவற்றில் இருந்து எம்மை விடுவித்துத் திரும்பவும் சித்தம் அழகியாராக அழகு நடை போடமுடியும் எனவும் முதலமைச்சர் மேலும் தெரிவித்தார்.

Related Posts