போர் குற்றம் குறித்த விசாரணையில் சர்வதேச நீதிபதிகள் தேவையில்லை! ஜனாதிபதி மைத்திரி உறுதி!!

இறுதிப் போரில் நடந்த போர் குற்றங்கள் மற்றும் மனித உரிமைகள் மீறல் தொடர்பில் விசாரிக்க சர்வதேச நீதிபதிகள் தேவையில்லை என்பதில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெளிவாக இருக்கிறாராம். இந்தத் தகவலை கொழும்பில் இருந்து வெளியாகும் ஆங்கில நாளிதழ் ஒன்றுக்கு அளித்த நேர்காணலில் தெரிவித்துள்ளார்.

மேலும், போர் குற்றங்கள் மற்றும் மனித உரிமைகள் மீறல் தொடர்பான விசாரணைகளை சர்வதேசத்தின் ஒத்துழைப்பு இல்லாமலே மேற்கொள்ள முடியும். தேவை ஏற்பட்டால் மட்டும் சர்வதேசத்திடம் இருந்து தொழில்நுட்ப உதவியைப் பெறுவோம் ஆனால் அதையும் பெற வேண்டும் என்ற கட்டாயம் இல்லை எனவும் அவர் அந்த நேர்காணலில் மேலும் தெரிவித்துள்ளார்.

Related Posts