போர்நிறுத்த அழைப்புக்கு மத்தியிலும் இஸ்ரேலின் தாக்குதல்கள் தொடர்கின்றன

காசாவில் உடனடி போர்நிறுத்தத்துக்கு ஐநா பாதுகாப்பு கவுன்சில் கோரிக்கை விடுத்துள்ள நிலையிலும், அங்கு இஸ்ரேலின் விமான தாக்குதல்களும் தாங்கிப்படை ( tank) தாக்குதல்களும் தொடர்கின்றன.

_sp_gaza

ஆயிரக்கணக்கான மக்களை வெளியேறும்படி அறிவிக்கப்பட்டுள்ள ஷஜாய்யா மற்றும் மகாஸி பிரதேசங்களில் இஸ்ரேலிய விமானங்கள் வட்டமிட்டு வருகின்றமை அவதானிக்கப்பட்டுள்ளன.

அங்கு பீரங்கித் தாக்குதல்களும் தொடங்கப்பட்டுள்ளதாக செய்தியாளர் ஒருவர் கூறினார்.

இந்தத் தாக்குதல்களில் 500க்கும் மேற்பட்ட மக்கள் கொல்லப்பட்டுள்ளதாக காசாவில் உள்ள பாலஸ்தீன சுகாதார அமைச்சு கூறுகின்றது.

நேற்று ஞாயிற்றுக்கிழமை நடந்த மோதல்களில் தமது படைவீரர்கள் 13 பேரை இழந்துள்ளதாக இஸ்ரேல் கூறுகின்றது.

இருதரப்புக்கும் இடையில் அவசரமாக அமைதி ஒப்பந்தம் ஒன்றை ஏற்படுத்தும் முயற்சிகளுக்கு ஊக்கம் அளிப்பதற்காக அமெரிக்க வெளியுறவுச் செயலர் ஜோன் கெர்ரி எகிப்து சென்றுள்ளார்

Related Posts