போர்க் குழாய்க் கிணறுகளால் பாரிய தாக்கம் ஏற்படும் அபாயம்!

வடக்கு மாகாணத்தில் அமைக்கப்படவுள்ள 65ஆயிரம் பொருத்து வீடுகளிற்கு அமைக்கப்படவுள்ள போர்க் குழாய்க் கிணறுகளினால் பாரிய தாக்கம் ஏற்படும் அபாயம் உள்ளதாக வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

வடக்கு மாகாண நீரியல்வள அபிவிருத்தி ஆய்வரங்கு இன்று யாழ்ப்பாண பொது நூலகத்தில் நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு உரையாற்றும்போதே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் தெரிவிக்கையில்,

ஆழக் கிண்டும் போர்க் குழாய்க் கிணறுகளுக்கும் சாதாரண கிணறுகளுக்கும் நிறைய வித்தியாசம் உண்டு.

ஆழக் கிண்டும் போர்க் குழாய்க் கிணறுகள் ஆழடி நீரைத் தருவதால் ஆபத்தான விளைவுகள் ஏற்படும் சாத்தியம் உள்ளதாகவும் சுட்டிக்காட்டினார்.

போர்க்கிணறுகளின் தாக்கம் தொடர்பாக நாம் அறிந்துகொண்டுள்ளபோதிலும், மத்திய அரசாங்கம் அதன் தாக்கத்தை அறிந்திருக்க வாய்ப்பில்லையெனவும் தெரிவித்துள்ளார்.

Related Posts