போரை தொடங்கியது அவர்கள் தான்! ரஷ்ய அதிபர் அறிவிப்பு

ரஷ்யா – உக்ரைன் மீது போர் தாக்குதலை தொடங்கி ஓராண்டு பூர்த்தியாகவுள்ள நிலையில் ரஷ்ய ஜனாதிபதி முக்கிய அறிவிப்பொன்றினை வெளியிட்டுள்ளார்.

அதாவது ‘‘மீண்டும் சொல்கின்றோம்.போரை தொடங்கியது அவர்கள் தான்! நாங்கள் போரை நிறுத்தவே பலத்தை பிரயோகித்தோம்’’ என ரஷ்ய அதிபர் புடின் தெரிவித்துள்ளார்.

ரஷ்ய நாடாளுமன்றத்தில் யுத்த ஓராண்டு நிறைவையொட்டி கருத்து தெரிவிக்கும் போதே இதனை தெரிவித்துள்ளார்.

உக்ரைன் உடனான பிரச்சினையை அமைதியான வழியில் தீர்க்க எல்லா வகையிலும் நாங்கள் முயற்சித்து வருகின்றோம். ஆனால் எங்கள் முதுகுக்கு பின்னால் வேறு ஒரு சதித்திட்டம் தீட்டப்படுகின்றது.

மேற்கத்திய நாடுகள் ரஷ்யாவுக்கு எதிரான பகடைக்காயாக உக்ரைன் நாட்டை பயன்படுத்துகின்றன. நாங்கள் திரும்பவும் சொல்கிறோம், அவர்கள்தான் போரை தொடங்கினார்கள். நாங்கள் போரை நிறுத்த பலத்தை பிரயோகப்படுத்தினோம்.

நம்மைப் பொறுத்தவரை இது நமது இருத்தலுக்கான போர். நமது இருப்பு தற்போது ஆபத்திற்கு உள்ளாகி இருக்கின்றது.

ரஷ்யாவை தோற்கடித்துவிட முடியும் என்று தப்புக் கணக்கு போட்டு இந்த மோதலை அவர்கள் தொடங்கிவிட்டார்கள்.ரஷ்யாவை ஒருபோதும் யாராலும் வீழ்த்த முடியாது எனவும் புடின் தெரிவித்துள்ளார்.

Related Posts