“போருக்குப் பின்னரான அபிவிருத்தி” ஆய்வு மாநாடு எதிர்வரும் 20 ஆம், 21 ஆம் திகதிகளில் யாழ். பல்கலைகழத்தில் நடாத்த ஏற்பாடு

யாழ். பல்கலைக்கழகத்தில் நடைபெறவிருந்த ஆய்வு மாநாட்டின் ஆரம்ப நிகழ்வுகளை பல்கலைக்கு வெளியே நடாத்துவதற்கு பல்கலைக்கழகம் தீர்மானித்துள்ளது.அதனடிப்படையில், போருக்குப் பின்னரான அபிவிருத்தி என்னும் தலைப்பில் யாழ்.பல்கலைக்கழகத்தின் சர்வதேச ஆய்வு மாநாட்டின் ஆரம்ப நிகழ்வுகள் யாழ். ரில்கோ விருந்தினர் விடுதியில் நடைபெறவுள்ளதாகவும் மற்றய அமர்வுகள் திட்டமிட்டபடி பல்கலைக்கழகத்திலேயே நடைபெறும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எதிர்வரும் 20 ஆம், 21 ஆம் திகதிகளில் யாழ். பல்கலைகழத்தில் நடைபெறவிருந்த இந்த மாநாட்டிற்காக அழைக்கப்பட்டிருந்த பிரதம விருந்தினர் மற்றும் அதிதிப் பேச்சாளர் தொடர்பில் யாழ்.பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம் கடும் அதிருப்தி வெளியிடப்பட்டிருந்தது.

அந்த வகையில் மாநாட்டின் ஆரம்ப நிகழ்வில் உயர் கல்வி அமைச்சர் எஸ்.பி. திசாநாயக்கா மற்றும் பேராசிரியர் சரத் அமுனுகம ஆகிய இருவரும் அழைக்கப்பட்டிருந்தமைக்கு அதிருப்தி வெளியிட்ட நிலையிலேயே ஆய்வு மாநாட்டு நிகழ்ச்சி நிரலில் மாற்றம் கொண்டுவரப்பட்டுள்ளது.

ஏற்கனவே இவர் பங்கு கொள்வதாக இருந்தால் அந்த ஆரம்ப நிகழ்வை யாழ்.பல்கலைக்கழகத்துக்கு வெளியே நடத்துமாறு சங்கம் ஏகமனதாகத் தீர்மானித்து.

அதன்படி அது தொடர்பான கடிதத்தை நிகழ்வின் தலைவரான யாழ்.பல்கலைக்கழகத் துணைவேந்தர் பேராசிரியர் வசந்தி அரசரட்ணத்துக்கு பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம் அனுப்பிதனையடுத்து இத் தீர்மானம் எட்டப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்த மாநாட்டுக்குப் பிரதம விருந்தினராக உயர் கல்வி அமைச்சர் எஸ்.பி. திசாநாயக்கவும், அதிதிப் பேச்சாளராக களனிப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் பேராசிரியர் சரத்அமுனுகமவும் அழைக்கப்பட்டுள்ளனர். சிறப்பு விருந்தினராக இந்தியத் தூதுவர் அசோக் கே.காந்தா அழைக்கப்பட்டுள்ளார்.

இந்த மாநாட்டின் வளவாளர்களாக இந்தியா, ஆஸ்திரேலியா, அமெரிக்கா, பிரிட்டன், நியூசிலாந்து, பின்லாந்துனர்.

தற்போது நாடளாவிய ரீதியில் உள்ள பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் பல்வேறு கோரிக்கைகளைக் கொண்டு கடந்த 4ம் திகதி முதல் பணிப்பகிஷ்கரிப்பை நடாத்தி வருகின்றனர்.

எனினும் அவர்களது கோரிக்கைகளை உயர்கல்வி அமைச்சரோ அல்லது அரசோ தீர்க்கமான பதில் எதனையும் வழங்கவில்லை இதனடிப்படையில் உயர்கல்வி அமைச்சர் யாழ். பல்கலைக்கழகத்தில் நாடாத்த இருந்த ஆய்வு மாநாட்டில் அவர் கலந்து கொள்வதற்கு பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம் அதிருப்தி வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related Posts