போரின் போது இலங்கைக்கு வடகொரியா மூலம் உதவி வழங்கிய சீனா!! தற்பொழுது ரஷ்யாவிற்கு!!

இலங்கையில் போர் நடைபெற்ற போது சீனா நேரடியாக இலங்கைக்கு ஆயுதங்களை வழங்காது தனது முகவர் ஊடாக வடகொரியா மூலம் ஆயுதங்களை வழங்கியதாக சிரேஸ்ட விரிவுரையாளரான கலாநிதி மகிந்த பத்திரண தெரிவித்துள்ளார்.

வடகொரிய ஜனாதிபதி மற்றும் ரஷ்ய ஜனாதிபதிக்கு இடையிலான சந்திப்பு தொடர்பில் தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

தொடர்ந்தும் தெரிவிக்கையில்,

வடகொரிய ஜனாதிபதி கிம் ஜோன் உன் கடந்த வாரம் ரஷ்யாவுக்கு, ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடினை சந்தித்து பேச்சுவார்த்தைகளை நடத்தியிருந்தார்.

இது மேற்குலக நாடுகளை பதற்றமடைய செய்யும் நிலைமையை உருவாக்கியுள்ளது. இந்த சந்திப்பின் மூலம் ரஷ்யாவுக்கு தேவையான மேலதிக ஆயுதங்களை பெற்றுக்கொள்வது மாத்திரமின்றி வடகொரியாவுக்கு உணவு மற்றும் செய்மதி தொழிநுட்பங்களை பெற்றுக்கொள்ள உதவும்.

அத்துடன் வடகொரியாவின் வர்த்தக பங்காளியான சீனா இரண்டாம் தரப்பின் ஊடாக வடகொரியா மூலம் ஆயுதங்களை வழங்க தீர்மானித்துள்ளது.

இதனடிப்படையில் எதிர்வரும் குளிர்காலத்தில் ரஷ்யா மற்றும் உக்ரைன் இடையிலான போர் புதிய பரிமாணத்தை நோக்கிச் செல்லும். இது மேற்குலக நாடுகளுக்கு பெரும் அதிர்ச்சியாக அமையும்.

இலங்கையில் போர் நடைபெற்ற போது சீனா இலங்கைக்கு நேரடியாக ஆயுதங்களை வழங்கவில்லை. அதற்கு பதிலாக தனது முகவர் ஊடாக வடகொரியா மூலம் ஆயுதங்களை வழங்கியது. தற்போது ரஷ்யா சம்பந்தமாகவும் நடப்பது அதே நிலைமைதான் என குறிப்பிட்டார்.

Related Posts