Ad Widget

போரினால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் 1,37,529 வீடு­களை அமைத்துக் கொடுக்க அமைச்சரவை அங்கீகாரம்!

வடக்கு கிழக்கு பகு­தி­களில் போரினால் பாதிக்­கப்­பட்ட குடும்­பங்­க­ளுக்கு 1,37,529 வீடு­களை நிர்­மா­ணித்­துக்­ கொ­டுப்­ப­தற்­கான யோச­னைக்கு அமைச்­ச­ரவை அங்­கீ­காரம் வழங்­கி­யுள்­ளது.

D-m-suwamynathan

உள்­நாட்­டிலும் வெளி­நாட்­டிலும் நவீன துரித வீட்டுத் திட்டக் கட்­டு­மானப் பணி­க­ளுக்­கான ஆர்­வ­லர்­க­ளி­ட­மி­ருந்து திட்டக்கோர­லுக்­கான பத்­தி­ரங்­களை நிதி­யிடல் வச­தி­யுடன் பெற்றுக் கொள்ள புனர் வாழ்­வ­ளிப்பு மீள் குடி­யேற்றம் இந்து மத அலு­வல்கள் அமைச்சர் டி.எம்.சுவா­மி­நாதன் முன்­வைத்த யோச­னைக்கு அமைச்­ச­ரவை அங்­கீ­காரம் வழங்­கி­யுள்­ளது.

வடக்கு கிழக்கு பகு­தி­களில் போரினால் பாதிக்­கப்­பட்ட குடும்­பங்­க­ளுக்­காக வீடு­களை அமைப்­ப­தனை நல்­லி­ணக்கக் குழு வலி­யு­றுத்­தி­யி­ருந்­தது.

இதன் படி இந்­திய அர­சாங்­கத்தின் உத­வி­யுடன் 44000 வீடு­க­ளுக்­கான திட்டம் நடை­மு­றையில் இருந்த போதிலும் இதற்கு மேல­தி­க­மாக மாவட்ட செய­லா­ளர்­களின் கணிப்பின் படி தேவை­யான வீடுகளின் மொத்த எண்ணிக்கை 1,37, 529 ஆகும்.

அதன்படி அமைச்சர் சுவாமி நாதனின் யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

Related Posts