போரால் பாதிக்கப்பட்ட மக்கள் இயக்கத்தின் பொருளாளர் இனந்தெரியாத நபர்களால் தாக்கப்பட்டுள்ளார்.பேரால் பாதிக்கப்பட்ட மக்கள் இயக்கம் என்ற அமைப்பைச் சேர்ந்தவர்கள் ‘டக்ளஸ் தேவானந்தாவை விரட்டியடிப்போம்’ எனும் தொனிப்பொருளில் துண்டுப்பிரசுரங்களை விநியோகித்து வருகின்றனர்.
அதன்படி நேற்று பிற்பகல் 2மணியளவில் யாழ். மாவட்ட செயலகத்திற்கு முன்னால் உள்ள பஸ் நிலையப்பகுதியில் துண்டுப்பிரசுரங்களை விநியோகித்துக் கொண்டிருந்த வேளை இனந்தெரியாத நபர்களினால் தாக்குதலுக்கு உள்ளாக்கப்பட்டு யாழ்.போதனா வைத்தியசாலையின் 24ஆம் விடுதியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
புஸ்பராசா புவிலன் என்பவரே சம்பவத்தில் காயமடைந்தவராவார்.
சம்பவம் குறித்து தெரிவித்ததாவது,
3மோட்டார் சைக்கிளில் வந்த நால்வர் மண்வெட்டிப் பிடிகளால் தாக்குதல் நடத்தியதுடன் வந்திருந்தவர்கள் தகாத வார்த்தைப் பிரயோகங்களை மேற்கொண்டதாகவும் தெரிவித்தார்.