போராட்டத்தை கைவிடுமாறு பல்கலைக்கழக நிர்வாகம் மாணவர்களுக்கு அழுத்தம்!! மாணவர்கள் மறுப்பு!!

யாழ். பல்கலைக்கழக கலைப்பீடம், விஞ்ஞானபீடம், முகாமைத்துவ வணிக பீடம் ஆகியவற்றின் கல்வி செயற்பாடுகள் இடைநிறுத்தப்பட்டிருக்கும் நிலையில், மாணவர்களுக்கும், நிர்வாகத்திற்கும் இடையில் நேற்று மாலை சந்திப்பு ஒன்று நடைபெற்றுள்ளது.

இந்த சந்திப்பில் போராட்டத்தை கைவிடவேண்டும் என பல்கலைக்கழக நிர்வாகம் மாணவர்களுக்கு அழுத்தம் கொடுத்திருப்பதாக தெரியவந்துள்ளது.

எனினும், இதற்கு மறுப்பு தெரிவித்திருக்கும் தாங்கள், தொடர்ந்தும் போராட்டத்தை நடத்துவோம் என உறுதியாக கூறியுள்ளதோடு, பல்கலைக்கழக நிர்வாகம் தமது தீர்மானத்தில் எந்தவொரு மாற்றத்தையும் செய்ய இயலாது என கூறியிருப்பதாக, மாணவர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்தநிலையில் மாணவர்களுடைய போராட்டம் பல்கலைக்கழக முன்றலில் தொடர்ந்தும் நடைபெற்றுள்ளது.

Related Posts