போராதனை பல்கலை மோதல் குறித்து விசாரணை

பேராதனை பல்கலைக்கழக மாணவர் குழுக்களிடையே ஏற்பட்ட மோதல் தொடர்பில், பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

சம்பவம் தொடர்பில் குறித்த மாணவர்களின் வாக்குமூலத்தை பதிவு செய்ய நடவடிக்கை எடுத்துள்ளதாக, பொலிஸார் கூறியுள்ளனர்.

நேற்று முன்தினம் இரவு பேராதனை பல்கலைக்கழகத்தின் இணைந்த சுகாதார விஞ்ஞான கற்கைபீட மாணவக் குழுக்கள் இருவரிடையே மோதல் ஏற்பட்டது.

இதனையடுத்து காயமடைந்த ஐந்து மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

அண்மையில் இடம்பெற்ற கூட்டமொன்றுக்கு மாணவர்கள் குழுவொன்று வருகை தராமையை முன்னிருத்தி ஏற்பட்ட கருத்து முரன்பாடே இந்த மோதலுக்கு காரணம் என பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

இதேவேளை, இந்த மோதலில் இனவாதம் இருப்பதாக கூறப்படும் கருத்துக்களில் உண்மை இல்லை என, அப் பல்கலைக்கழக மாணவ சங்கம் குறிப்பிட்டுள்ளது.

Related Posts