போராட்டத்தில் கலந்துகொள்ளும் மக்கள் மீது இனந்தெரியாதவர்கள் தொடர்ந்தும் தாக்குதல்களை மேற்கொண்டு வருகின்றனர்.
யாழ்ப்பாணம் வலி வடக்கு மக்கள் தமது நிலங்களை தங்களிடம் வழங்குமாறு கோரி மாவிட்டபுரம் கந்தன் ஆலயத்திற்கு முன்னால் தொடர் உணவு தவிர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
அதன்படி வலி.வடக்கில் இருந்து இடம்பெயர்ந்து முகாம்களிலும் நண்பர்கள், வாடகை வீடுகளிலும் தங்கி இருக்கும் மக்கள் குறித்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொள்ள வரும் வாகனங்களை நிறுத்தும் நோக்குடன் இனந்தெரியாதவர்களினால் பிரத்தியோகமாக ஆணிகளால் செய்யப்பட்ட இரும்புக் கட்டைகளை வீதிகளில் வீசுவதுடன் மக்கள் மீதும் வீசியும் தாக்குதல் நடாத்தி வருவதாக மக்கள் தெரிவித்துள்ளனர்.
மேலும் நேற்று இரவு மக்கள் வருகை தரஇருந்த பஸ்கள் மீது கல்லெறி தாக்குதல் நடாத்தியதுடன் சாரதிகள் மற்றும் மக்களும் இனந்தெரியாதவர்கள் அச்சுறுத்தியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
தொடர்ந்தும் போராட்டத்திற்கு கலந்து கொள்ளும் மக்களை ஏற்றிச் செல்ல அனுமதிக்க கூடாது என இன்றைய தினம் வடமராட்சி தனியார் சிற்றூர்திகள் சங்கத்திற்கு அறிவுறுத்தியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. எனினும் மக்கள் தமது பணத்தை கொடுத்து ஹயெஎஸ் என்பனவற்றிலேயே வந்துகொண்டு இருக்கின்றனர்.
இதேவேளை நேற்யை தினமும் இந்த தாக்குதல் நடாத்தப்பட்டு இருந்தமை குறிப்பிடத்தக்கது.