யாழ்ப்பாணம் வலிகாமம் வடக்கிலிருந்து இடம்பெயர்ந்து முகாம்களில் தங்கியுள்ள மக்கள் தம்மை சொந்த இடங்களில் மீளக்குடியமர்த்த வலியுறுத்தி இன்று அடையாள உண்ணாவிரதப் போராட்டமொன்றினை முன்னெடுக்கவுள்ளதாக அறிவித்து இருந்தனர்.
ஆனால், குறித்த போராட்டம் கடுமையான அரசியல் அழுத்தம் காரணமாக கைவிடப்பட்டு உள்ளதாக தெரிய வருகின்றது.
இன்று காலை 8 மணிமுதல் மதியம் 12 மணிவரை சுன்னாகம் சபாபதிப்பிள்ளை மற்றும், கண்ணகி முகாம் மக்கள் இணைந்து மேற்படி பிரதேசத்தின் பொது இடமொன்றில் அடையாள உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட இருந்த நிலையிலேயே மேற்படி போராட்டம் கைவிடப்பட்டு உள்ளது.
யுத்தம் காரணமாக 1990 ஆம் ஆண்டு தமது சொந்த இடங்களிலிருந்து வெளியேற்றப்பட்ட வலி வடக்கு மக்கள் கடந்த 25 வருடங்களாக முகாம்களிலேயே பல்வேறு கஸ்ர துன்பங்களுக்கு மத்தியில் அகதி வாழ்க்கையை வாழ்ந்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.