போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மக்களுக்கு மருத்துவ உதவிகள்

முல்லைத்தீவு கேப்பாப்பிலவு, பிலவுக் குடியிருப்பு மக்கள் நடத்தி வரும் நில மீட்புப் போராட்டத்தில் உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டுள்ள சிறுவர்களுக்கான மருத்துவ உதவிகள் வழங்கப்படுகின்றது.

போராட்டம் நடைபெறும் இடத்துக்கு முல்லைத்தீவு பொது வைத்தியசாலை வைத்தியர்கள், தாதியர்கள் வருகை தந்து சிறுவர்களைப் பரிசோதனை செய்து மருந்துகளையும் வழங்கி வைத்தனர்.

கடந்த மாதம் 31ஆம் திகதியில் இருந்து தமது பூர்வீக நிலங்களை விடுவிக்குமாறு கோரி கேப்பாப்பிலவு, பிலவுக் குடியிருப்பு மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றார்கள்.

தொடர்ச்சியாக 20 நாட்களாக போராட்டத்தில் உரிய உணவு மற்றும் அடிப்படை சுகாதார வசதிகள் இல்லாத நிலையில் உள்ள மக்கள் தற்போது உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இவற்றில் அங்குள்ள சிறுவர்கள் அதிகளவில் உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் அம்பியூலன்ஸ் ஒன்றில் அங்கு வந்த வைத்தியக் குழுவினர் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த சிறுவர்களுக்கு, மருத்துவ பரிசோதனை செய்திருந்தனர். குறிப்பாக அங்கு உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்த சுமார் 20 பேருக்கு மருத்துவ உதவிகள் அவர்களால் வழங்கப்பட்டிருந்தது.

Related Posts