போனஸ் இரண்டும் யார் யாருக்கு? ஆர்வத்தில் ஆதரவாளர்கள்!(2ம் இணைப்பு)

வடமகாணசபைத்தேர்தலில் தமிழ்த்தேசியக்கூட்டமைப்பு அமோகவெற்றியீட்டி 36 ஆசனங்களில் 28 இனை கைப்பற்றி மேலதிகமான 2 போனஸ் ஆசனங்களினையும் பெற்றுக்கொண்டிருக்கின்றது. 1988 மாகாணசபைகள் தேர்தல் சட்டத்தின்இலக்கம் 2 பிரிவு 62 இற்கமைவாக இங்கு கிடைத்துள்ள இந்த 2 போனஸ் ஆசனங்களை யார் யாருக்கு வழங்கவேண்டும் என கட்சியின் செயலாளரினால் தேர்தல் ஆணையாளருக்கு சிபார்சு செய்யப்படவேண்டும்.

இந்த போனஸ் ஆசன விவகாரத்தில் ஏற்கனவே தேர்தலுக்கு முன்பாக உடன்பாடுகள் அல்லது பேரங்கள் கூட்டபமைபபுக்குள் பேசப்பட்டு முடிவுகள் எட்டப்பட்டிருப்பதாக கூறப்படுகின்ற போதிலும் வேட்பாளர்களின் ஆதரவாளர்கள் தமிழ்த்தேசிய ஆதரவாளர்கள் மத்தியில் தேர்தலின் முடிவுகளின் அடிப்படையில் சிபார்சுகள் கருத்துக்கள் பகிரப்படுகின்றன.

இந்நிலையில் கிளிநொச்சியில் போட்டியிட்ட தமிழ்த்தேசியக்கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் தமிழர் விடுதலைக்கூட்டணித்தலைவர் வீ.ஆனந்தசங்கரி தோல்வியுற்றநிலையில் அவரது பெயர் அவரது ஆதரவாளர்களால் சிபார்சுசெய்யப்பட்டுள்ளது.தோல்வியடைந்த வேட்பாளர்கள் எடுத்த விருப்பு வாக்குகள் வருமாறு

கிளிநொச்சி
3 கந்தசாமி திருலோகமூர்த்தி 4199
4 கேதுரட்ணம் வினுபானந்தகுமாரி 2953
2 வீரசிங்கம் ஆனந்த சங்கரி 2896
6 பூபாலசிங்கம் தர்மகுலசிங்கம் 1188

யாழ்ப்பாணம்
க.தர்மலிங்கம் -13256
எஸ்.குகதாஸ் -13256
த.தம்பிராசா -7325
என்.வி.சுப்பிரமணியம் -6578
ஆர்.ஜெயசேகரம் -6275

இந்நிலையில் வேட்பாளர் பட்டியலில் புறக்கணிக்கப்பட்ட முன்னாள் ஊடகவியலாளர் வித்தியாதரன் அவர்களது பெயரும் இந்த ஆசனத்திற்காக பேசப்படுகிறது.ஆனால் வேட்பாளரல்லாத ஒருவர் தெரிவுசெய்யப்படமுடியாதென்று சட்டம் கூறுகின்றது

தோற்ற வேட்பாளர்களில் யாரால் கூடுதலான வாக்குகளை வீட்டுக்கு கொண்டுவர முடிந்திருக்கின்றதோ அவர்களுக்கே அந்த போனஸ் இடங்கள் வழங்கப்படவேண்டும் என ஒருசாராரும். மூத்த தலைவர் ஆனந்த சங்கரிக்கு வழங்குவதே மேல் என அவரது ஆதரவாளர்களும்.கூறுகின்றனர் வித்தியாதரனுக்கு வழங்குவதாக முன்னரே ஒத்துக்கொள்ளப்படிருக்கின்றது என்று கசிந்த செய்தியையும் ஒருதரப்பும் முன்வைக்கின்றது. அதேவேளை நல்லாட்சிக்கான மக்கள் இயக்கத்தைச் சேர்ந்த ஒரு முஸ்லிமுக்கு ஆசனம் ஒன்று கொடுத்து நல்லெண்ணத்தை வெளிப்படுத்தலாம் என ஒருதரப்பு வாதிடுகின்றது.

நல்லாட்சிக்கான மக்கள் இயக்கத்துடன் ஏற்கனவே உடன்படிக்கை ஒன்று தேர்தலுக்கு முன்பாக உடன்படிக்கை ஒன்று செய்யப்பட்டிருந்தது. அதன்படி அந்த அமைப்பின் சார்பில் மன்னாரில் போட்டியிட்ட அந்த அமைப்பின் வேட்பாளர் தோல்விடைந்து கணிசமான விருப்புவாக்குகளை பெற்றிருந்தால் அவருக்கு அதனை வழங்குவதற்கு சாதகமாக பரிசீலிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

இதற்கான விடை கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தனின் கையில் தான் இருக்கின்றது.

இந்த முடிவு தமிழ்த்தேசியக்கூட்டமைப்பு வேட்பாளர் தெரிவில் ஏற்பட்ட சலசலப்பு போன்ற நிலையினை மீண்டும் ஏற்படுத்தியிருக்கிறது.அடுத்துவரும் நாட்கள் அதற்கான முடிவை தரும் என எதிர்பார்க்கப்படுகின்றது

பிந்திய செய்தியின்படி அந்த 2.ல் ஒன்று முல்லைத்தீவு மாவட்டத்திற்கும் மற்றது மன்னாருக்கும் வழங்கப்பட உள்ளது.

Related Posts