போதை மாத்திரை, லேகிய பொதிகளுடன் யாழ். பல்கலை விஞ்ஞான பீட மாணவர் கைது!!

போதை மாத்திரை மற்றும் தடைசெய்யபட்ட லேகிய பைகளுடன் யாழ் பல்கலைக்கழக விஞ்ஞான பீட மாணவர் ஒருவரை விசேட அதிரடிப் படையினர் கைது செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இன்று (20) கோண்டாவில் பகுதியில் உள்ள வாடகை அறையில் வைத்து குறித்த மாணவன் கைது செய்யப்பட்டுள்ளார்.

இது குறித்து மேலும் தெரியவருவதாவது,

விசேட அதிரடிப் படையினருக்கு கிடைத்த புலனாய்வு தகவலுக்கமைய கோண்டாவில் புகையிரத கடவைக்கு அண்மித்த பல்கலைக்கழக மாணவர்கள் தங்கியுள்ள வாடகை அறையில் முற்றுகையிட்டு விசேட அதிரடிப் படையினர் முன்னெடுத்த சோதனை நடவடிக்கைகளின் பொழுது 55 தடைசெய்யபட்ட லேகிய பைகளையும் 11 போதை மாத்திரைகளையும் கைப்பற்றியுள்ளனர்.

Related Posts