Ad Widget

போதையை கைவிடுங்கள் கணவனின் பிணத்துடன் புகைப்படம் எடுத்து பேஸ்புக்கில் போட்ட பெண்

போதைப் பழக்கத்தால் உயிரை இழந்த தனது 26 வயது கணவரின் உடலுடன், தானும், தனது பிள்ளைகளுடன் சேர்ந்து புகைப் படம் எடுத்து பேஸ்புக்கில் போட்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார் அமெரிக்காவைச் சேர்ந்த ஒரு பெண்.

amerecca-girls-husband

போதைப் பழக்கம் உயிரைப் பறிக்கும். அதை இனியாவது விட்டு விடுங்கள். அதற்காகத்தான் இந்தப் புகைப்படம் என்று அவர் விளக்கம் அளித்துள்ளார். இதைப் பார்த்து நாலு பேர் திருந்தினால் அது தனக்கு மகிழ்ச்சியே என்றும் அவர் கூறியுள்ளார்.

அமெரிக்காவை சேர்ந்த பெண் ஈவா ஹாலந்த். இவரது கணவரின் பெயர் மைக் செட்டில்ஸ். கணவர் ஹெரோயின் போதைப் பழக்கத்திற்கு அடிமையானவர். இந்தத் தம்பதிக்கு லூகாஸ் மற்றும் அவா என்ர மகளும் மகனும் உள்ளனர். மைக்கும் ஈவாவும் 11 ஆண்டு காலம் சேர்ந்து வாழ்ந்தனர்.

அமைதியான இவர்களது வாழ்க்கையில் ஹெரோயின் போதையால் சூறாவளை வீசி விட்டது. போதைக்கு அடிமையாகிப் போன மை செப்டெம்பர் 2 ஆம் திகதி மரணமடைந்தார்.

உடைந்துபோன ஈவா, அந்த சோகத்திலிருந்து உடனடியாக வெளியே வந்து ஒரு காரியத்தை செய்தார். சவப்பெட்டியில் வைக்கப் பட்டிருந்த தனது கணவரின் உடலுக்கு அருகே தானும், தனது பிள்ளைகளுமாக நின்று ஒரு புகைப்படம் எடுத்துக் கொண்டார்.

பின்னர் இந்தப் புகைப்படத்தை தனது பேஸ்புக், இன்ஸ்டாகிராம் ஆகிய வற்றில் வெளியிட்டார். கூடவே தனது சோக வாழ்க்கையையும், மைக்குக்கு நேர்ந்த கதியையும் விளக்கி, இதுதான் எல்லோருக்கும் கதி. கடைசியில் மரணம்தான் கிடைக்கும். இன்றே போதைப் பழக்கத்தை விட்டுவிடுங்கள் என்று அதில் வேண்டுகோள் விடுத்திருந்தார்.

அவரது இந்தக் கடிதமும், புகைப்படமும் பலரையும் உலுக்கியது. பலரும் தங்களது கெட்ட பழக்கத்தை விட ஆரம்பித்து விட்டதாக ஈவாவுக்கு தெரிவித்து வருகின்றனர்.

ஒரு பெண் தனது போதைப் பழக்கத்திலிருந்து விடுபட இந்தப் புகைப்படம் உதவியதாக கூறி நடு ரோட்டில் வைத்து ஈவாவைக் கட்டிப் பிடித்து அழுது நன்றி கூறியுள்ளார்.

ஈவா தனது கடிதத்தில் கூறியுள்ளதாவது, நீங்கள் முடிவெடுக்காத ஒவ்வொரு நாளும் உங்களது முடிவு வேகமாக நெருங்கி வருகிறது என்று அர்த்தம். எந்தப் பெற்றோரும் தங்களது பிள்ளையை அடக்கம் செய்வதை நினைத்துக் கூட பார்க்க மாட்டார்கள். அதே போலத்தான் எந்தக் குழந்தையும் இவ்வளவு இளம் வயதில் தனது பெற்றோரை இழக்க விரும்பாது என்று தெரிவித்துள்ளார்.

Related Posts