போதையில் கடமையிலிருந்த கொடிகாம பொலிஸ் உத்தியோகஸ்தர்கள் பணி நீக்கம்!

கொடிகாமம் பொலிஸ் நிலையத்தைச் சேர்ந்த இரு பொலிஸ் உத்தியோகத்தர்கள் பணியின்போது மதுபோதையில் காணப்பட்டமையால் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கொடிகாமம் பகுதியில் குறித்த இருவரும் நேற்று (செவ்வாய்க்கிழமை) நண்பகல் கடமையில் ஈடுபட்டபோது மேற்கொள்ளப்பட்ட விசேட பொலிஸ் பரிசோதனையில் அவர்கள் இருவரும் மதுபோதையிலிருந்தமை தெரியவந்துள்ளது.

இதனையடுத்து குறித்த இருவருடமும் சாவகச்சோி பொலிஸ் அத்தியட்சகர் தலைமையில் விசேட விசாரணை மேற்கொள்ளப்பட்டது.

குறித்த விசாரணையில் குற்றம் உறுதியானமையால் இருவரும் மறு அறிவித்தல் வரை பணி நீக்கம் செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Related Posts