எதிர்கால தலைமுறைகளை பாதுகாப்பதற்காக போதை மருந்துக்கு அடிமையான 3 மில்லியன் பேரை கொன்றுவிட தயார் என்று பிலிப்பைன்ஸ் அதிபர் ரோட்ரிகோ டுடெர்டோ தெரிவித்திருக்கிறார்.
ஈவிரக்கமில்லாத பிலிப்பைன்ஸ் அதிபரின் இந்தக் கருத்துக்கு பல நாடுகளும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
இருப்பினும், இவர் பதவியேற்ற பின்னர் காவல்துறையினராலும், கண்காணிப்பாளர்களாலும் இதுவரை 3,000பேர் கொல்லப்பட்டுள்ளனர்.
இவரின் கருத்துக்கு பல நாடுகளிலிருந்து எதிர்ப்புக்கள் கிளம்பியிருந்தாலும், இவர் தன்னுடைய போதை மருந்துகளுக்கு எதிரான நேர்மையான பரப்புரையை அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் விமர்சித்திருப்பது, அவற்றின் போலித்தனத்தை காட்டுகிறது என்று குறிப்பிட்டுள்ளார்.