போதனாசிரியர்களிற்கான விண்ணப்பங்கள் கோரல்

இலங்கை தொழிற் பயிற்சி அதிகாரசபையின் யாழ்ப்பாண மாவட்டத்தில் உள்ள தொழில்பயிற்சிநிலையங்களுக்கு பின்வரும் கற்கை நெறிகளை கற்பிக்கும் போதனாசிரியர்களுக்கான வெற்றிடங்கள் காணப்படுகின்றது.

சமையற்கலை, வெதுப்பாளர், அறை ஒழுங்குபடுத்துநர், மின்மோட்பர் மீள்முறுக்குநர்(வைண்டிங்), உணவுப் பரிசாரகர்,நீர்க்குழாய்பொருத்துநர் (பிளம்பிங்), தகவல் தொடர்பாடல் தொழில்நுட்ப உதவியாளர்,முன்பள்ளி ஆசிரியர் அழகுக்கலை வல்லுனர், பெண்கள் மற்றும் சிறுவர்களுக்கான ஆடை வடிவமைப்பாளர் அலுமினியம் பெருத்துநர்.

கல்வித்தகைமை-கபொத (சாதாரண தர தமிழ், கணிதம் ஆங்கிலம் உட்பட 4 திறமைச்சித்திகளுடன் 6 பாடங்களில்சித்தி. தொழில்சார் தகைமைஅரசாங்க அங்கீகாரம் பெற்ற நிறுவனத்தில் NV0-34மட்டம் அல்லது அங்கீகரிக்கப்பட்ட நிறுவனத்தில் சம்பந்தப்பட்ட துறையில் 3 வருடகாலத்திற்கு மேல் தொழில் பயிற்சி பெற்றதற்கான சான்றிதழ் அல்லது சம்பந்தப்பட்டதுறையில் டிப்ளோமா அல்லது பட்டம்பெற்றிருத்தல், துறையில் இரண்டு வருடத்திற்கு மேலான அனுபவம்.

எனவே மேற்படிதகைமைகளுடைய ஆர்வமுடையவர்கள் தங்கள் சுயவிபரக் கோவையைதிைவரும் 30.10. 2015 இற்கு முன்னதாக உதவிப் பணிப்பாளர். இலங்கை தொழில் பயிற்சி அதிகார சபை, 1 ஆம் மாடி, வீரசிங்கம் மண்டபம், இல. 12. கே.கே.எஸ் வீதி, யாழ்ப்பணம் என்னும் முகவரிக்கு அனுப்பி வைக்குமாறு இலங்கை தொழில்பயிற்சி அதிகாரசபையின் யாழ். மாவட்ட உதவிப் பணிப்பாளர் கு.நிரஞ்சன் அறிவித்துள்ளார்

Related Posts