போட்டி நடுவர் பணியில் இருந்து விலகுகிறார் மகனாமா

இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் 49 வயதான ரோஷன் மகனாமா கடந்த 2004–ம் ஆண்டில் இருந்து சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் (ஐ.சி.சி.) எலைட் போட்டி நடுவர் (மேட்ச் ரெப்ரி) குழுவில் பணியாற்றி வருகிறார்.

roshan-makanama

இதுவரை அவர் 58 டெஸ்ட், 222 ஒரு நாள் போட்டி மற்றும் 35 இருபது 20 ஓவர் போட்டிகளில் போட்டி நடுவராக இருந்துள்ளார். இதில் மூன்று உலக கோப்பையும் அடங்கும்.

இந்த நிலையில் இந்த ஆண்டுடன் போட்டி நடுவர் பணியில் இருந்து விலகுவதாக நேற்று அவர் அறிவித்தார். குடும்பத்தினருடன் அதிகமான நேரத்தை செலவிடுவதற்காகவும், இலங்கையில் தொழில் நடவடிக்கைகளை கவனிப்பதற்காகவும் இந்த முடிவுக்கு வந்திருப்பதாக மகனாமா தெரிவித்தார்.

Related Posts