Ad Widget

போசாக்கின்மை வீதம் நாட்டில் அதிகரிப்பு! கிளிநொச்சி மாவட்டமே முதலிடத்தில்!!

நாட்டின் ஏனைய மாவட்டங்களைவிட கிளிநொச்சி மாவட்டமே போசாக்கின்மையால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளதாக பிரதி சுகாதார அமைச்சர் லலித் திஸநாயக்க தெரிவித்துள்ளார்.

malnutrition-child-posakku

தற்போது இங்கு 35.9 வீதமான குழந்தைகள் போசாக்கின்மையால் பாதிக்கப்பட்டுள்ளன என்றும் இதற்கு கடந்த காலத்தில் இங்கு இடம்பெற்ற போரே காரணம் என்று அவர் மேலும் கூறியுள்ளார்.

சுகாதார அமைச்சின் புள்ளி விவரங்களின்படி நாட்டில் குழந்தைகளின் போசாக்கின்மை கடந்த தசாப்தத்தில் 17.3 வீதத்தில் இருந்து 21.1 வீதமாக அதிகரித்துள்ளது.

2000 ஆம் ஆண்டு காலப்பகுதியில் 18.4 வீதமாக போசாக்கின்மை குறைபாடு இருந்தது.

இதேசமயம் நிறைகுறைந்த பிள்ளைகளின் பிறப்பு இலங்கையில் 22.8 வீதமாக உள்ளது எனக் கூறிய அவர் ஏனைய ஆசிய நாடுகளுடன் ஒப்பிடுகையில் இலங்கையின் நிலை திருப்தியாக உள்ளது என்றார்.

மேலும் கடந்த 1977-78 ஆம் ஆண்டு காலப்பகுதியில் இது 50.4 வீதமாகவும், போசாக்கின்மை 49.8 வீதமாகவும் இருந்தது என்றும் கூறிய அவர், ஆனால் தற்போது இந்நிலைமை கம்பஹா மாவட்டத்தில் தலைகீழாக மாறி சராசரி போசாக்கு அளவை விட அதிகூடிய போசாக்குடைய குழந்தைகளின் பிறப்பு அதிகரித்துள்ளது என்றும் அவர் சொன்னார்.

Related Posts