யாழ் மாவட்டத்தில் போக்குவரத்து விதி முறைகளை மீறிய 2,107 பேருக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக யாழ். பிரதேச பொலிஸ் அத்தியட்சகர் எம்.சி.எம். ஜெப்ரி தெரிவித்தார்.
யாழ். பொலிஸ் நிலையத்தில் நடைபெற்ற வாராந்த பத்திரிகையாளர் சந்திப்பின் போது, போக்குவரத்து பொலிஸ் பொறுப்பதிகாரி சமிந்த சில்வாவிடம் விபரத்தினை பெற்று பத்திரிகையாளர்களுக்கு கூறினார்.
அதன்போது, யாழ். மாவட்டத்தில் கையடக்கத் தொலைபேசி பாவணை, தலைக்கவசம் இன்றி மோட்டார் வாகனம் செலுத்திய , வழி அனுமதி பத்திரமின்றிய பேருந்துகளுக்கு எதிராக யாழ். போக்குவரத்து பொலிஸாரினால் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அதனடிப்படையில், யாழ். மாவட்டத்தில் கையடக்கத் தொலைபேசியில் உரையாடிக் கொண்டு வாகனம் செலுத்திய 66பேரும், வழி அனுமதி பத்திரமின்றி பேருந்து உரிமையாளர்கள் 378 பேரும், தலைக்கவசம் இன்றி மோட்டார் சைக்கிள் செலுத்திய 1663 பேருக்கும் எதிராக யாழ். மாவட்டத்தில் உள்ள 5 நீதிமன்றங்களிலும் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் அத்தியட்சகர் மேலும் கூறினார்.