போக்குவரத்து விதிகளை மீறுவோருக்கு எதிராக சட்டநடவடிக்கை!

கொழும்பு நகரிலும் அதற்கு அண்டிய பகுதிகளிலும் போக்குவரத்து விதிமுறைகள் இன்று (26) முதல் கடுமையாக நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.

இவ்வகையில் உரிய வீதிப் போக்குவரத்து ஒழுங்குகளை பின்பற்றாது வாகனங்களை செலுத்துகின்றவர்கள் மற்றும் போக்குவரத்து விதிகளை மீறுபவர்கள் மீது சட்டநடவடிக்கை மேற்கொள்ளப்படுமென பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ஏ.எஸ்.பி.றுவான் குணசேகர தெரிவித்தார்.

இதன் பிரகாரம் ஶ்ரீஜயவர்தனபுர வீதியின் ஜயந்திபுரவில் இருந்து கொழும்பு வரையான பகுதியில் அதிக எண்ணிக்கையான பொலிஸாரை ஈடுபடுத்தி வீதிச் சட்டங்கள் முழுமையாக கண்காணிக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Related Posts