போக்குவர்த்து விதிகளை மீறும் சாரதிகளுக்கு விதிக்கப்படவுள்ளதாக உத்தேசி்க்கப்பட்ட 25,000 ரூபா அபராதம் விரைவில் அமுல்படுத்தப்படும் என பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தர அறிவித்துள்ளார்.
பொலிஸ் தலைமையகத்தில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் பங்கேற்று உரையாற்றிய போதே அவர் இந்த தகவலை வௌியிட்டார்.
மோட்டார் போக்குவரத்து விதிகளை மீறுபவர்களுக்கு எதிராக வரவு செலவுத் திட்டத்தில் பரிந்துரை செய்யப்பட்ட அபராதத்தை விரைவில் அமுல்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் குறிப்பிட்டார்.
இது குறித்து பேச்சுவார்த்தைகள் இடம்பெற்று வருவதாக தெரிவித்த பொலிஸ்மா அதிபர் அதன் பின்னர் தராதரம் பாராது அபராதத்தை விதிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
குறித்த அபராத நடைமுறை கட்டாயமானது. தவறிழைப்போருக்கு எதிராகவே அபராதம் விதிக்கப்படும்.
வீதி ஒழுங்குகளை மதித்து அவற்றை முறையாக கடைப்பிடித்து, சட்ட ரீதியாக வாகனம் செலுத்தும் சாரதிகளுக்கு எந்தவித இன்னல்களும் ஏற்படாது என அவர் குறிப்பிட்டார்.