போக்குவரத்து அதிகாரசபையை உருவாக்கும் முயற்சியில் வடக்கு மாகாணசபை

north-provincial-vadakku-npcவடக்கு மாகாணசபை, தனியான வீதி போக்குவரத்து அதிகாரசபையை உருவாக்குவதற்கான முயற்சிகளில் ஈடுபட்டுள்ளது.

இதுதொடர்பான தீர்மான வரைவு விரைவில், வடக்கு மாகாணசபையில் சமர்ப்பிக்கப்பட்டு ஒப்புதல் பெறப்படவுள்ளது.

இந்த தீர்மான வரைவைத் தயாரிப்பதற்காக, வடக்கு மாகாண போக்குவரத்து அமைச்சு, பல்வேறு தனியார் போக்குவரத்து சங்கங்களுடன் கலந்துரையாடி அவற்றின் அலோசனைகளைப் பெற்று வருகிறது.

தற்போது, தீர்மான வரைவைத் தயாரிக்கும் பணிகள் இடம்பெற்று வருவதாகவும். ஒருமாதத்துக்குள் இந்தப் பணி முடிவடையும் என்றும் வடக்கு மாகாண போக்குவரத்து அமைச்சின் செயலர் ஆர்.வரதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.

தீர்மான வரைவுக்கான ஆலோசனைகளைப் பெறுவதற்காக வடக்கு மாகாண போக்குவரத்து அமைச்சர் டெனிஸ்வரன் மற்றும் அதிகாரிகள், மன்னார் தனியார் பேருந்து உரிமையாளர் சங்கங்களுடன் கலந்துரையாடியுள்ளனர்.

இதில், வடக்கிலுள்ள எல்லா மாவட்டங்களின் சங்கங்களினது பிரதிநிதிகளும் கலந்து கொண்டனர்.

தீர்மான வரைவு தயாரிக்கப்பட்டதும் அது, வடக்கு மாகாணசபையல் சமர்ப்பிக்கப்பட்டு ஒப்புதல் பெறப்பட்ட பின்னர், ஆளுனரின் ஒப்புதலுக்காக அனுப்பப்படும்.

Related Posts