போக்குவரத்துக்கு ஒத்துழைப்பு வழங்குங்கள் – பா.டெனீஸ்வரன்

பாப்பரசர் வருகையை முன்னிட்டு நாளை 13ஆம் திகதி, போக்குவரத்து சபையினர் விசேட போக்குவரத்து நடவடிக்கைகளை ஒழுங்காக மேற்கொள்ள ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என கேட்டுக் கொள்வதாக வடமாகாண போக்குவரத்து அமைச்சர் பா.டெனீஸ்வரன் தெரிவித்தார்.

deneeswaran

பாப்பரசர் வருகையை முன்னிட்டு பல்வேறு ஏற்பாடுகளும் நடைபெற்று வருகின்றன.

இதில் விசேட போக்குவரத்து சேவைகளை தனியார் போக்குவரத்து சேவைகள், இலங்கை போக்குவரத்து சபை ஆகியன நேர அட்டவணைகளை ஒழுங்குபடுத்தி விரைவாக செயற்பட வேண்டும்.

அத்துடன் எதிர்வரும் 14ஆம் திகதி மடு தேவாலயத்திற்கு திருப்பலியில் கலந்து கொள்ள வருகை தரும் அனைவரும் மாலை 2 மணிக்கு முன்னர் ஆலயத்துக்குள் வருகை தந்து போக்குவரத்து இடையூறுகளை தவிர்த்துக்கொள்ள வேண்டும்.

பாப்பரசர் வருகையின் போது வடமாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரன் மற்றும் வடமாகாண சுகாதார அமைச்சர் ப.சத்தியலிங்கம், வடமாகாண விவசாய அமைச்சர் பொ.ஐங்கரநேசன், வடமாகாண கல்வி அமைச்சர் த.குருகுலராஜா ஆகியோரை விசேடமாக நான் அழைத்துள்ளேன் என அவர் மேலும் தெரிவித்தார்.

Related Posts