போகம்பறை சிறைச்சாலையில் தப்பிக்க முயன்ற கைதிகள் மீது துப்பாக்கி சூடு!! ஒருவர் சாவு!!

கண்டி பழைய போகம்பறை சிறையில் இருந்து தனிமைப்படுத்தலில் வைக்கப்பட்டிருந்த 5 கைதிகள் தப்பிக்க முயன்றதைத் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் கைதி ஒருவர் கொல்லப்பட்டுள்ளார்.

சம்பவத்தில் கைதி ஒருவர் தப்பித்துள்ளதுடன் மேலும் 3 கைதிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்தச் சம்பவம் நேற்று இரவு இடம்பெற்றுள்ளது.

தபித்த கைதியை கைது செய்வதற்கான தேடுதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளது என்று சிறைச்சாலை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

கண்டி பழைய போகம்பறை சிறைச்சாலையில் கைதிகள் இடையே ஏற்பட்ட கோரோனா வைரஸ் தொற்றை அடுத்து கைதிகள் பலர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

அவ்வாறு தனிப்பிரிவில் தனிமைப்படுத்தப்படிருந்த கைதிகள் 5 பேர் நேற்றிரவு தப்பிக்க முயன்றுள்ளனர். அதனால் சிறைக் காவலர்களால் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

Related Posts