‘போகன்’ படத்தில் அரவிந்த்சாமி யார்?

சோஷியல் மீடியா வந்த பிறகு அக்கப்போர்களுக்கு அளவே இல்லாமல் போய்விட்டது. சினிமாவுக்கு சம்மந்தமே இல்லாத ஆட்கள் இல்லாம் கையில் ஒரு மொபைலை வைத்துக் கொண்டு கோடம்பாக்கத்தில் அலைய ஆரம்பித்துவிட்டனர். இப்படிப்பட்ட ஆட்களால் திரையுலகில் அநியாயத்துக்கு குழப்பம்.

pokan-jeyam-ravi-arvitha-samy

ஒரு ஸ்டில் வெளிவந்தால் போதும், அதில் உள்ள நடிகரின் கெட்அப்பைப் பார்த்துவிட்டு அவர் இந்த கேரக்டரில் தான் நடிக்கிறார் என கதை கட்டுகிறார்கள். ஜெயம் ரவியும், அர்விந்த் சாமியும் போலீஸ் யூனிஃபார்மில் இருக்கும் ‘போகன்’ படத்தின் புகைப்படம் ஒன்று அண்மையில் வெளியானது. உடனே இருவரும் போலீஸாக நடிக்கிறார்கள் என்பது தொடங்கி படத்தின் முழுக்கதையையும் கற்பனையாக எழுதித் தள்ளினார்கள்.

உண்மையில், ‘போகன்’ படத்தில் ஜெயம் ரவி மட்டுமே போலீஸாக நடிக்கிறார். ரசிகர்களை குழப்புவதற்காக அரவிந்த்சாமிக்கும் காக்கியை மாட்டி விட்டிருக்கிறார்கள். ‘ரோமியோ ஜூலியட்’ படத்தைத் தொடர்ந்து லக்ஷ்மண் இயக்கும் இப்படத்தின் முதல் பாதி முழுக்க ஜெயம் ரவிக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டிருக்கிறது. இரண்டாம் பாதியில் அர்விந்த் சாமியின் அட்டகாசங்கள் இருக்குமாம். ராஜ வம்சத்து கடைசி வாரிசாக இப்படத்தில் அர்விந்த் சாமி நடிக்கிறாராம். லைக் ஃபாதர் லைக் சன் என்ற அயல்நாட்டு படத்தின் இன்ஸ்பிரேஷன்(ஈயடிச்சான் காப்பி) தான் இந்தப்படம் என்கிறார்கள்.

Related Posts