பொலிஸ் மா அதிபருக்கு எதிராக சட்டநடவடிக்கை?

பொலிஸ் மா அதிபரின் செயற்பாடுகள் சம்பந்தமாக விசாரணை ஒன்றை நடத்தி அது தொடர்பில் சரியான நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதிக்கு அறிவிப்பதற்கு அரசியலமைப்பு பேரவை தீர்மானித்திருப்பதாக அரசியல் வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.

பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தரவின் செயற்பாடுகள் பிரச்சினைக்குறிய வகையில் இருப்பதாக இன்று கூடிய அரசியலமைப்பு பேரவையில் பேசப்பட்டுள்ளது.

அண்மையில் இரத்தினபுரி பிரதேசத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் போது பொலிஸ் மா அதிபருக்கு வந்த தொலைபேசி அழைப்பு தொடர்பில், பொலிஸ் மா அதிபரிடம் விளக்கம் கோருவதாகவும், அதன்போது பொலிஸ் மா அதிபர் நடந்து கொண்ட விதம் தவறானது என்றும் ஜனாதிபதி முன்னதாக கூறியிருந்தார்.

எவ்வாறாயினும் ஜனாதிபதிக்கே பொலிஸ் மா அதிபரை நியமிக்கும் அதிகாரம் இருப்பதுடன், சட்ட நடவடிக்கை எடுக்கும் அதிகாரம் அரசியலமைப்பு பேரவைக்கு இல்லை என்பதால் அது தொடர்பில் தீர்மானம் எடுக்கும் அதிகாரத்தை ஜனாதிபதிக்கு வழங்குவதற்கு அரசியலமைப்பு பேரவை தீர்மானித்திருப்பதாக அரசியல் வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.

Related Posts