பொலிஸ் பாதுகாப்புடன் நாளைய வடக்கின் சமர்

central-st.johns-bigmatchயாழ். மத்திய கல்லூரி அணிக்கும் பரியோவான் கல்லூரி அணிக்கும் இடையில் 50 பந்து பரிமாற்றங்கள் கொண்ட துடுப்பாட்ட போட்டி நாளை நடைபெறவுள்ளது.

பரியோவான் கல்லூரி மைதானத்தில் நாளை காலை 9. 00 மணிக்கு போட்டி நடைபெறவுள்ளது

நாளை நடைபெறவுள்ள 50 ஓவர்கள் கொண்ட தொடரில் பாதுகாப்பு ஏற்பாடுகள் தொடர்பாக மத்திய கல்லூரி முதல்வரிடம் கேட்டபோது

இரு கல்லூரி அதிபர்கள் மற்றும் பழையமாணவர் சங்க பிரதிநிதிகள் இணைந்து ஒப்பந்தம் ஒன்றிலும் கைசாத்திட்டுள்ளோம். அதில் விளையாட்டு வீரர்கள், மத்தியஸ்தர்கள் ,மாணவத் தலைவர்கள் மற்றும் வைத்திய ஆலோசகர்கள் மட்டுமே மைதான எல்லைக்குள் உட்புக முடியும் என்றும், அனுமதி இன்றி உள் நுழைபவர்கள் பொலிஸாரினால் கைதுசெய்யப்பட்டு சட்டநடவடிக்கை மேற்கொள்வது என்று தீர்மானிப்பது இணக்கம் காணப்பட்டுள்ளது.

மேலும் ரசிகர்கள் மற்றும் பழைய மாணவர்கள் மதுபோதையில் மைதானத்துக்குள் நுழைவது முற்று முழுதாக தடைசெய்யப்பட்டுள்ளது. இதற்கு இரு கல்லூரி பழைய மாணவர் சங்க பிரதிநிதிகளும் இனக்கம் கொண்டுள்ளதாக கல்லூரி முதல்வர் தெரிவித்துள்ளார்.

அண்மையில் நடைபெற்ற வடக்கின் பெரும் போரில் மதுபோதையில் குழப்பம் விளைவித்த பழைய மாணவர்கள் தொடர்பில் கூடிய கவனம் செலுத்தப்பட்டதுடன் இவ்வாறான குழப்பங்கள் பிரச்சனைகளை தடுக்கும் முகமாக இப் போட்டிக்கு யாழ். பொலிஸின் உதவியை நாடியுள்ளதாக தெரிவித்துள்ளார்

இதேவேளை இப் போட்டிக்கு பாதுகாப்பு பொலிஸாரின் தேவை கருதி இரு கல்லூரி முதல்வர்களும் பழைய மாணவர் சங்கபிரதிநிதிகளும் இணைந்து யாழ். பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியிடம் கோரிய போது அதற்கு ஒத்துழைப்பு வழங்குவதாக உறுதி அளித்துள்ளார் என்று முதல்வர் மேலும் தெரிவித்தார்.

தொடர்புடைய செய்தி

வடக்கின் போரில் சென்.ஜோன்ஸ் வெற்றி பெற்றதாக அறிவிப்பு

Related Posts